பார்தேனா என்றே தெரியவில்லை
அறிமுகமாகினேன்
சடங்கே அதுவும்
பேசினேன்
பேசினேன்
மகிழ்ந்தேன்
பழகினேன்
லயித்து போனேன்
நெருகினேன்
பறக்கிறேன் என்று
தெரியாமல்
ஆசை பெருக்கு
என்னுள் இருப்பதாய்
உணரலாயினேன்
சொன்னேன்
சிரித்தாய்
பெரியதாய் சிரித்தாய்
ரசித்தேன் நான்
விளையாட்டில்லை என்று
உணர்த்தினேன்
ஒரு சீற்றம்
உன் கண்ணில்
அப்பப்பா
விடவில்லை
உன் நிலைமையை உணர்த்த
அரும் பாடு பட்டாயே
அறியவில்லை நீ
நான் ஒரு மூடன்
என்று
என்னை தவிக்கவிடாமல்
தவிக்கவிட்டாயே
என்று எண்ணி
தினம் தினம்
ரசிக்கிறேன் உனையே
££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££
உனக்கு நான் என்றல் ஏளனம்
எனக்கு நீ என்றல் தோரணம்
சிரிப்பதில் குறை வைக்கவில்லை நீ
பேசுவதிலும் இல்லை
உண்மையை சொல்வதில் மட்டும் வைத்தாயே
எதற்கு?
இளிச்சவாயன் இவன்
இளித்து கொண்டே இதையும் ஏற்பேன்
என்றா?
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்த
ஓரு தலைக்காரர்களின்
தொல்லை
என்பதை அனுபவிப்பத்தின்
கொடுமை புரிகிறது
அனால் வழி இல்லையே
அனுபவியுங்கள்
யாம் பெற்றது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
குறிப்பு: குறிப்பாக சொல்ல ஒன்னும் இல்லை. அவ்வளவு தான்.
No comments:
Post a Comment