முதலில் ஒரு விஷயம், நான் இங்க சொல்வது பொதுப்படையாக்குவதாக இருக்கிறது என்று யாரும் எண்ணுவீர்களேயானால், "போங்கடா போக்கத்தவனுகளா", என்று நான் சொல்லமாட்டேன், அதுதான் உங்களுடைய புரிதல், அதைக் குற்றம் சொல்ல நான் யாரு? எவனுமே இல்லை, அதேபோல், அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது. நான் எழுதப்போவது என் அனுபவத்தில் ,என் மண்டையில் சேர்ந்துள்ள ஒரு புரிதல் என்று சொல்லலாம், இல்லை அறிவு என்றும் கூட சிலர் சொல்கின்றார்கள், ஏதோ ஒன்று, வைத்துக்கொள்ளுங்கள்.... ஆனால் இது ஒரு ஆணாதிக்கம் கொண்ட மனதில் இருந்து எழவில்லை, அதற்கு நான் உறுதி. ஒரு சக மனிதனின் அனுபவத்தில் கண்ட விஷயம் என்று எடுத்துகொள்ளுங்கள், இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் முக்கியமாக...
அதே போல் இனி மேல் இந்த முன் எச்சரிக்கை, பின் எச்சரிக்கை எல்லாம் போடப் போறதில்லை, நீங்க என்னை பத்தி என்ன மயிற நெனச்சா எனக்கு என்ன வந்துச்சு, அதனால இப்பவும், போங்கடா போக்கதவன்களா, என்று சொல்லாமல் வெறும், வெறும், என்னமோ பண்ணுங்கடா மனிதப்பதர்களா என்று சொல்லி விட்டு, விஷயத்துக்கு இப்பவாவது வரேன்....
இதை எழுதுறதுக்குள்ள நான் எழுத வேண்டிய விஷயத்த மறந்துடுவேன் போலிருக்கு,
சரி, தலைப்ப படிக்காம நேர விஷயத்தப் படிக்கற அறிவாளிகளெல்லாம் தலைப்பப் படிங்க, மத்தவங்க - நாம ஒன்னும் பெருசா புடுங்கிடல அதனால தான் நம்மளையும் அறிவாளின்னு சொல்லலன்னு வருத்தப் பட வேண்டாம், தொடர்ந்து படிங்க...
நான் இதுவரை பார்த்து, பழகிய பெண்கள்ல இருந்து ஒரு சில விஷயங்கள பொதுவான விஷயமா, அதாவது எல்லோர்கிட்டயும் இருக்கற விஷயமா நான் சில விஷயங்கள கவனிச்சிருக்கேன், அனுபவிச்சிருக்கேன், ரசிச்சிருக்கேன், இப்படி என்னவென்னாலும் சொல்லலாம்,
அவை என்னவெல்லாம் என்றால்,
- பேசும் போது, நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் மனதில் வைத்துகொள்ளுவது போல் கேட்கிறார்களே என்று சும்மா அடுக்க வேண்டாம், அடுத்த நாளே அதே விஷயத்தை அவர்கள் உங்களிடம் சந்தேகமாக கேட்கும் வாய்ப்பு உண்டு. அதற்காக அவர்கள் ஞாபகமறதி உள்ளவர்கள் என்று நினைக்க வேண்டாம், உங்களை மடக்கத் தேவையான விஷயம் எல்லாம் நாவின் நுனியில் இருக்கும்.
- அவர்களால் பதில் சொல்ல முடியாத தருணங்களில் 'வாயை மூடு' என்று சொல்லி விடுவார்கள்.
- நீங்கள் சொல்லும் விஷயம் அவர்களுக்குப் புரியவில்லை என்றால், 1 -2 முறைக்கு மேல், அந்த விஷயமே வேண்டாம் என்று விடுவார்கள், அதுவே அவர்கள் சொல்லும் விஷயம் புரியவில்லை என்று ஒரு கேள்வி கேட்டால் கூட, 'இது கூட தெரியாத முட்டாளா நீ?' என்று நம் அறிவுத்திறனுக்கு ஒரு சோதனை வேறு.
- தப்பித் தவறியும் நம்மை எங்கு சென்றாலும் கூட்டிச் செல்கிறாள், நம்மை உரிமையாய் மிட்டாய், ஐஸ் கிரீம் கேட்கிறாள், படத்துக்கு வருகிறாள் அதனால் அவளுக்கு உங்கள் மேல் காதல் என்று உளறி விடாதீர்கள், முடிந்தது உங்களுடைய அப்பாவின் பணத்தை செலவு செய்ய வேறு ஒரு பெண்ணை அல்லது நண்பனின் அறிவுரையைக் கேட்க டாஸ்மார்க் செல்லுவது நிச்சயம். சில நல்ல உள்ளம் கொண்ட(கண்டிப்பாக தமிழ் சினிமா நிறைய பார்க்கும் கனவான்களாக இருக்க வாய்ப்பு அதிகம்) மாந்தர்கள்,அவள் தன்னை அண்ணன் என்று கூறினாலும் பரவாயில்லை என்று, அவர்களுக்கு இன்னும் அதிகாலை எழுந்து படிக்க அலாரம் கடிகாரங்கலாக பயன் படுகிறார்கள். வாழ்க அம்மாந்தர்கள்.
- நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களாக இருந்தால், தயவு செய்து துறவறம் பற்றி யோசிக்கலாம், அதே சமயம் அவர்களுடைய ஒரு கேள்விக்கு ஒன்பது சமாதானமாவது கையில் வைத்துக்கொள்ளுங்கள், கண்டிப்பாக உதவும்.
- நீங்கள் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்துகொள்ளுங்கள், ஆனால் அவர்கள் முடிவு எடுத்த விஷயம் தான் நடக்கும், மறக்க வேண்டாம். அதனால், எதாவது விஷயம் சொல்லி அவர்கள் ஒப்புக்கொண்டார்கலென்று பெருமை வேண்டாம்.
- அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு தெரியும், ஆனாலும் செய்வார்கள், அதை நீங்க என்ன சொல்லி விளக்குங்க, ஒன்னும் எடுபடாது. கேட்டால் அவர்களுக்கு என்று ஒரு காரணம் பொதுவாக தியாகமாக தான் இருக்கும், குடும்பம், அப்பா, அம்மா, நீங்கள், தெருவில் செல்லும் சொறிநாய், ஊரு சனத்தின் நலன், இந்த உலகின் எதிர்காலம், கடைசிக்கு உங்க சந்தோஷம் கூட லிஸ்ட்-ல் இருக்க கூடும், ஆனால் அவர்கள் பெயர் மட்டும் இராது. அது ஏனோ, அவர்களுக்கே வெளிச்சம்?
- நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பதால் அவர்களுக்கு சுய அறிவு இல்லையென்று இல்லை.இது மிக முக்கியமான விஷயம்.
சரி,இவன் என்ன பெண்களைப் பற்றி இப்படி பேசுகிறான்? இவனுக்கு என்ன பெண்களைப் பத்தித் தெரியும்னு கேட்கும் பெண்ணியவாதிகளே, இதெல்லாம் என் மனதில் உள்ள கேள்விகள், உங்களுக்கு தெரிந்த பெண்ணியத்தை வைத்தோ, அல்லது பெண்களை வைத்தோ இதைத் தீர்த்தல் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
பெண்களே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன், முடிந்தால் பதில் கூறினால், உங்களுக்கும் புண்ணியம் உண்டு, பாரபட்சம் இல்லை, இங்கு 100% சம உரிமை தான்.
ஆண்களே, இவற்றை நான் இங்கு சொல்வதற்கு காரணம், இதை நீங்கள் புரிந்து நலமுடன் வாழ. என்ன தான் நானும், என்னுடன் சேர்ந்து பேசுபவர்களும் மணிக்கணக்காக இப்படிப் பேசினாலும், நாம் பெண்கள் இல்லாமல் வாழ்வது முடியாது என்பது அடியேனின் கருத்து. அவர்கள் நம் வாழ்வின் சகம், அவர்ளை பாகம் பிரித்து பொருள் விளக்காமல் புரிய முயற்சி செய்வோம்.
சில புகைந்து கொண்டிருக்கும் தோழிகளுக்கு, இந்த ஆண்களைப் பற்றி ஒன்று கண்டிப்பா சீக்கீரம் எழுதுவேன், அதனால் கோபம் வேண்டாம். முடிந்தால் இந்த புத்தி இல்லாத ஆண் கூட்டத்தை மன்னித்து உங்கள் அன்பைத் தரவும்...
வேண்டுகோள்: யாராச்சும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தால், தமிழ் தெரியாத கனவான்கள் படிக்க உதவியாய் இருக்கும். எவரேனும் உண்டோ???
No comments:
Post a Comment