இன்னக்கி காலங்காத்தால வந்தவுடன் என்னை வரவேற்ற என் மினஞ்சல் பெட்டி, எனக்கு வைத்திருந்த முதல் மினஞ்சல் என்னவென்றால், என் அலுவலகத்தில் வேலை செய்யும் யாரோ ஒரு நபரின் கடிதம், அதன் கரு, தனக்கு கடந்த இரண்டு வருடங்களாக இரத்த புற்றுநோய் இருப்பதாகவும், அதற்காக இதுவரை தான் 24 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், இப்போது தன்னுடைய கடைசி கட்ட மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் எங்களை உதவுமாறு கேட்டு கொண்டுள்ளார், குறிப்பு, இவரின் குடும்பம் பண வசதில்லாதது, தன குடும்பத்தை காப்பாற்ற தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.
முதலில் இதை பார்த்து எனக்கு பரிதாபம் தான் வந்தது, காரணம் அவரின் உடல் நிலை கருதி அல்ல, அவரின் மன நிலை கருதியே, இவ்வள்ளவு பணம் செலவு செய்து அவருடைய உயிரை காப்பாற்றியபின் என்ன நடக்கும்? மீண்டும் இதே நரக வாழ்க்கை, இதற்கு அவர் ஏன் இவ்வள்ளவு கஷ்ட படுகிறார்? அவர் நினைத்தால், இதே 24 லட்சம் ருபாய் செலவு செய்து இந்த வாழ்க்கையில் தான் காண விரும்பியவற்றை கண்டு கழித்து, சுகமாக தன் உயிரை இப்பூவுலகில் இருந்து நீக்கியிருக்கலாம், அவர் ஏன் இதை செய்யவில்லை? எப்படி இருந்தாலும் அவர் இறந்த பின் அவருடைய உயிர் காப்பிட்டு தொகை அவருடைய குடும்பத்தை காக்க உதவியிருக்கும். இப்போது என்னவோ அவரை நினைத்து அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தினம் தினம் வேதனை தான்.
நம் வாழ்க்கை சிறப்புடையது, அதை நாம் இயற்கையாய் வாழ்ந்தாலே போதுமானதே என்பது அடியேனின் கருத்து, அவருக்கு இரத்த புற்றுநோய் வந்தது எவ்வள்ளவு இயற்கையோ அதே அளவு உண்மை அவரை எந்த மருத்துவமும் இறப்பில் இருந்து காப்பாற்ற போவதில்லை, இன்றில்லையேல் இன்னும் ஒரு நாள், இறப்பு உறதி, அதை சந்திக்க ஏன் இந்த பயம்? தனியாக செல்கிறோம் என்ற பயமா? இந்த உண்மையை அவரிடம் சொல்ல எனக்கு ஆசை, அதை அவர் ஏற்று கொள்ளும் மன பக்குவத்தில் இருப்பாரா?
வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அவரின் பெற்றோர், சுற்றத்தார் ஒருவர் கூட இதை அவரிடம் சொல்ல ஏன் எத்தனிக்கவில்லை?
என் இயற்கை தாயே உன்னை என் சகாக்கள் என்று புரிந்து கொள்வார்களோ? வாழ்வின் சுகத்தை எப்போது முழுமையாக ஏற்ப்பார்களோ? புரிதல், பகுத்து பார்த்தல், நிஜம், புறம், உலகம், வாழ்க்கை, வாழ்வது இப்படி எதாச்சும் ஒன்றையாவது அறிய எத்தநிபார்களா?
இது இறக்கம் இன்றி எழுதும் ஒருவனின் பதிவு இல்லை. என் சக மனிதன் ஒருவனை ஒரு கும்பல் காசுக்காக வாழும் ஆசை ஊட்டுகிறது, இதை நம்பி ஏமாந்து தன் வாழ்நாளின் பொன்னான நேரத்தை படுக்கையில் கழித்து கொண்டிருக்கும் என் சகாவிடம் இந்த உண்மையை சொல்ல முடியாத கையலாகதவனின் புலம்பல்.
இதை படிக்கும் இன்டர்நெட்-எ, இவ்வுண்மையை எப்படியாவது அவரிடம் சேர்பாயா?
No comments:
Post a Comment