நான் சொல்லும் ஒரு சொல்லின் பொருள் நான் சொல்லும் பொருளிலேயே உங்களுக்கும் புரிந்தது அல்லது புரிகிறது என்று உங்களாலோ என்னாலோ உட்சிதமாக சொல்ல முடியுமா? சரி புரியவில்லை என்பதையாவது சொல்ல முடியுமா? என் அறிவுக்கு தெரிந்த வரை அதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு அல்லது இல்லை என்றும் கூட சொல்லும் தைரியம் உண்டு*.
கல்யாணம் என்னும் இந்த சொல்லும் மற்ற சொற்களைப் போல் தான் இடம், நிலை, மனம், மனிதர்கள், உறவுகள், சூழ்நிலைகள், நாடுகள், கலாச்சாரங்கள் இப்படி பல்வேறு சமாசாரங்களைக் கொண்டே பொருள் விளங்கி வரும்.
அதனால், நான் இப்போது கூறுவதும் எனக்கு தெரிந்த புரிந்த விசயங்களை இப்போது இருக்கும் மன நிலையில் கூறுகிறேன். இது மாறலாம், மாறாமலும் இருக்கலாம். இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அதே போல் உங்களுடைய விளக்கங்களுக்கு மாறாகவும் எதிராகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வருக...
இப்போது உள்ள தமிழ் பேசும் சமுதாயத்தில் கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடல் உறவு வைத்து கொள்ளவும், பெண் வீட்டாரிடமிருந்து முடிந்த அளவுக்கு சுருட்டவும், வாழ்நாள் முழுமைக்கும் ஒரு சம்பளம் இல்லாத அடிமையைக் குத்தகைக்கு எல்லோர் முன்னிலைமையிலும் எடுப்பதுமாக உள்ளது. இதற்கு கடன் வாங்கி பிரமாண்டமான ஏற்பாடு வேறு. இப்படி செய்து வைக்கும் கல்யாணங்களின் லட்சணம் நம் வீடுகளில் பல் இளித்து கொண்டு இருப்பதை காணலாம்.
பெற்றோர் செய்து வைக்கும் கல்யாணம் தான் இப்படி என்றால், நம்மவர்கள் செய்யும் காதல் திருமணங்கள் இன்னும் ஒரு ராகம், காதல் என்பதின் அர்த்தம் நம் திரை உலகம் காட்டுவது என்றும், சன் மியூசிக், இசையருவி போன்ற ஒரு சானலில் 'ஐ லவ் யூ ....' என்று குறும் தகவல் அனுப்புவது என்றும், காதலிக்கும் போது காதலிப்பவரை தொடுவது தவறு என்றும், தொடாமல் செய்யும் காதலே புனிதமானது என்றும் அவர் அவர்களுக்கு ஏற்றவாறு ஒன்றை புரிந்து கொண்டு, காதலித்தவரை கை பிடிக்க பெற்றோரின் அரவணைப்பை உதறி விட்டு ஓடி வந்தாவது வாழ்வது என்ற லட்சிய வெறி உடையவர்கள், தங்களின் இளமையின் துடிப்பு வெறும் சில வினாடிகளில், நிமிடங்களில் முடிவதை அறிந்து, ஏமாற்றம் அடைந்து, அதை தங்களின் காதல் மீது காட்டும் நல்லவர்களாக உள்ளனர்.
புத்தகங்களில், நாடகங்களில், கவிதைகளில், திரையில், பாடல்களில் வரும் அனைத்து காதல்களும் கற்பனையே. தான் நினைத்தவாறு வாழ முடியாதவர்களின் ஏக்கங்களே இப்படி ஒரு கலையின் வடிவில் உருவெடுக்கிறது, இது இப்போது உள்ள நிலை.
அந்த காலங்களில் தங்களின் சந்தோஷத்தை, தாங்கள் அனுபவித்தவற்றை 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்' என்று கலை வளர்ந்தது.
இப்படி ஒரு காரணம் இருந்திருக்கலாமோ என்று எத்தனை பேர் இங்கு யோசித்திருபீர்கள்?
என்னுடன் பனி புரியும் ஒரு பெண்ணுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக துணை தேடுகிறார்கள். குறைந்த பட்சம் ஒரு கோடி தமிழ் இளைஞகர்கள் இருந்தும் அந்த பெண்ணிற்குத் துணை கிடைகாததின் காரணம், வெறும் மதம், குளம், கோத்திரம், ஜாதகம், சமயம், கடவுள், இனம், மொழி, இடம் மட்டுமல்ல, பிள்ளை வீட்டார் பெண் கண்டிப்பாக வேலைக்கு செல வேண்டும் என்று போடும் நிபந்தனை தான், இதற்கு அவர்கள் கூறும் காரணங்களில் சில இருவரும் சம்பாரித்தால்தான் நிம்மதியாய் வாழ முடியும் என்று சென்னையில் இரண்டு வீடு சொந்தமாக வைத்திருக்கும் பெற்றோரின் மகன், அம்மாவுக்கு டியால்ய்சிஸ் (dialysis) செய்ய வேண்டும் என்று சொல்லும் மகன், இப்போது வேலைக்கு போகாத பெண்கள் உண்டா என பெண்ணியம் பேசும் புதல்வன்.
இப்படியாக இருக்கும் ஒரு முறையை எதிர்த்து, நான் எனக்குப் பிடித்த பெண்ணுடன் நான் விரும்பும் வரை வாழ்கிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லுபவனை, நீ கண்டிப்பாக மாறி விடுவாய், மாறி தான் ஆகா வேண்டும் என்றும் சொல்லும் உலகத்தை எதிர்கொண்டுளேன்.
எனக்கு உன்னுடன் உறவு வைத்துகொள்ள வேண்டும் என்று தம் எதிர் பாலினரிடம் போய் கேட்டு தங்களின் இளமையை அனுபவிக்க முடியாத அவலம், அப்படியே தைரியமாக கேட்டு விடுபவர்களை அதன் முழு அர்த்தம் புரியாமல் கேவலமான பிறவியாய் கருதபடுபவர்களாக உள்ள நிலை, சிலர் இன்னும் ஒரு படி போய் தங்களின் தாகங்களை தீர்த்து விட்டார்கள் அதுவும் கல்யாணத்துக்கு முன்னமே என்று பாவிகளாக சித்தரிக்க படுபவர்களின் நிலை இப்படி பல்வேறு நிலையை என் இளைய தலைமுறைக்கு உருவாக்கி அது நியாயம் என்று வாதாடும் என் முந்தைய தலைமுறை.
இதை நான் எழுதுவதால், இதை படிக்கும் ஒருவராவது தங்களின் இயற்கையான உணர்வை தவறு என்று எண்ணாமல், தங்களின் சுயத்தை காப்பாற்றுவார்களே ஆயின் போதும், சக்கரம் சுழல ஆரம்பித்து விடும்.
6 comments:
:)
முத்துக்குமார், நல்ல சிந்தனையோட்டம்..
ஆயினும் எனக்கு நகைமுரணாகத் தெரிவதைக் கூற எண்ணம்.. இதே சிந்தனையை உங்களின் ஒரு buzz update உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எனக்குள் எழுந்த முதல் கேள்வி, இதே சிந்தனையை ஏன் இவர் ஒரு பெண்ணாக இருந்து எண்ணியிருக்கக் கூடாதென்று தான்.. ஒரு பெண் புகைப்பதென்பது குற்றமென்று உணரும் நெஞ்சம், வரலாறு கூட வேண்டாம், கடந்த தலைமுறை வரையேனும் சென்று பார்த்து, இது வரை புகைத்த, குடித்த ஆடவர்களின் செயல்களுக்குத் 'தீர்ப்பெழுத' முடியாதா? இத்தகைய கடிவாளத்தைப் போட்டுக்கொண்டு வாளெடுக்கும் எண்ணத்தை ஆணாதிக்கமென்றோ, chauvinistic attitude என்றோ கூற முடியலமில்லையா? அப்படியென்றால் நமக்கும் 'ராமசேனா'வுக்குமுண்டான இடைவெளி என்ன?
இந்தப்பதிவுக்கு வருவோம்.. 'நான் எனக்குப் பிடித்த பெண்ணுடன் நான் விரும்பும் வரை வாழ்கிறேன், என்னை விட்டு விடுங்கள் ' - எண்ணம் நன்றுதான்.. சமூகத்தில், சமூகத்துள் இருக்கும்வரை, சமூகத்தின் சுகங்களை நுகரும்வரை, வெறும் நுகர்வாளனாய் இருக்கும்வரை, இந்த சிந்தனைகள் சமூகத்துகெதிரானதே.. 'விரும்பும் வரை வாழ விழையும்' ஒருவன் 'கூட விழையாமல்' இருப்பானா? எதிர்வரும் விளைவுகளைச் சந்திக்காமல் விலகிச் செல்ல எத்தனிக்கும் சுயநலவாதியாய்த்தான் சமூகம் நோக்கும்.. 'marriage' as a commitment, entrusts a man/woman with the responsibility of bringing up the next generation with love, intimacy and prosperity.. this doesn't hold true for states like britain/us, the main reason being, the 'next generation' get the due benefits from the state in every possible way, through education, healthcare n security funds.. but a seemingly 'poor' state like ours can't afford such luxury for the 'poor' citizen, unless the recipient is the head of companies like tatas/birlas/mittals..
கடைசியாக, உங்கள் மற்றுமொரு 'buzz update' சொல்வது 'be responsible parents'.. :) சொல்வதற்கில்லை..
நண்பரே கொஞ்சம் நாளாகவே என்னை நீங்கள் பின் தொடர்வது தெரிகிறது.... நன்றி முதலில்.... இதில் நீங்கள் எழுபியுள்ள நியாயமான கேள்விகளுக்கு பதில்கள், அதற்கு முன் ஒன்று, இது வெறும் சப்பை கட்டு கட்டும் வில்லகம் என்ற நோக்கோடு படிக்க வேண்டாம் , கொஞ்சம் தொலை நோக்குடனே சொல்கிறேன்,
அந்த புகை பிடிக்கும் buzz ஒரு தகவலாகவே கொடுக்க நினைத்துள்ளேன்.அது ஒரு tweet-இன் re-tweet. அவ்வளவே. நான் பெண்கள் புகை பிடிபதற்கு எதிரியோ, இல்லை கடிவாளம் கட்டிக்கொண்டோ இதை காணவில்லை. நான் புகை பிடிபதர்க்கு மொத்தமாகவே எதிரி. அதை சொல்வதே என் நோக்கம்.
அடுத்து, இந்த சமுகத்தில் நான் இருக்க கூடாது என்பதின் ஏக்கமே இந்த பதிவு ,இவர்கள் வைத்துள்ள விதிகள் எல்லாம் ஒரு கட்டுப்பாடு விதிக்கும் பேரில் நம் இயற்கையான நியதிகளை பின்பற்ற விடாமல் தடுக்கின்றன...
நீங்கள் சொல்லும் படி நான் நிறைய புத்தர்கலையோ, கிரிஷ்ணர்கலையோ இங்கு நான் பார்க்கவில்லை...if the system is correct then y r v having so much comotions all around. this is not escaping from commitments, if a dog gives birth, it doesnot keep the its kid till death with itself, it tenders and cares it till the required phase and allows it to be itself.... this post was just to tell my இயலாமை to live like i should be living in this nature created world. rules and regulations are suppressing my feelings and torturing me to follow which i will not really want to do ever in my life.... as u tell till am in this society they r not going to accept what am telling, but i care nothing, am telling what i have known and trying to know, thats all....
and the buzz about being responsible parents was, yes, it is true, because of inevetability if am to live in this world, then i shud bring my children in the way that they shud grow, not just by getting them what they want, money, pizza burger movioes, glasses popcorn and just their mind shud not depend on money and related things....
இங்கு நாம் காமத்துக்கு கொடுக்காத மரியாதையே இவ்வாறு எதிர் ஒளிபாதாக எண்ணுகிறேன்...'last'the statement of i will live with any girl till i like means, not just the body pleasure ending date is the expiry of the relation, it is called unlimited love, that is when u r able to live like that, when u get a gal like that u ll b in so much deep luv u ll not know when u lived, when u were dead, it is about souls, nxt stage... v r not trying that part.... இந்த வாழ்க்கையில் வெறும் ஒரே பெண்ணை மட்டும் வாழ்ந்துவிட முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை, first time-e அப்படி ஒரு பெண் கிடைச்சா சந்தோஷம், ஆனால் அதற்கு கம்மி வாய்ப்பு, அதான் அந்த statement, அது உண்மை என்று நினைபதால்.....
கொஞ்சம் பெரிய பின்னுட்டம், ;-)
:) முத்துக்குமார், எண்ணங்களை வெளிப்படுத்தச் 'சமூகம்' தடைவிதிப்பதில்லை.. 'சுயம்' தான்..
சில கேவலமான ஒப்பீடுகளைச் செய்ய நேரிடுமோ என்று நினைக்கிறேன்.. இருப்பினும், தொடருவோம்..
'this post was just to tell my இயலாமை to live like i should be living in this nature created world'
இது இயற்கை ஏற்படுத்திய உலகம் என்பது மிகைப்படுத்தப்பட்ட பதம்.. உடையணிவதையும், பொருள் ஈட்டுவதையும் ஏற்றுக்கொண்ட நாம், இன்னும் சிலவற்றையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.. SEC விதிக்கும் regulations ஐ மதிக்கும் நாம், இங்குள்ளவற்றையும் மதித்துதான் ஆகவேண்டும்.. மாற்றத்தைக்கொண்டு வரலாம்.. இங்கும் சரி, SECயிலும் சரி.. அதற்கான நியாயபடுத்தப்பட்ட தேவைகளைப் பொறுத்து.. நம் பெயர்களின் பின் இட்டுக்கொள்ளும் 'பட்டங்களைத்' துறந்தவர்கள்தான் நாம்(சிலரைத் தவிர).. ஆனால், அவர் சொல்லியும் செய்தும் காட்டிய அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.. இது நடந்தது நம் பாட்டனின் காலத்தில்.. so, this argument becomes invalid.. 'என் இளைய தலைமுறைக்கு உருவாக்கி அது நியாயம் என்று வாதாடும் என் முந்தைய தலைமுறை'
'அந்த புகை பிடிக்கும் buzz ஒரு தகவலாகவே கொடுக்க நினைத்துள்ளேன்' நன்று.. இருப்பினும், அதற்கு 'இந்தியா புகைகிறது' என்ற பதமும் மிகைப்படுத்தப்பட்டதே..
'just their mind shud not depend on money and related things' நன்று..
' இங்கு நாம் காமத்துக்கு கொடுக்காத மரியாதையே இவ்வாறு எதிர் ஒளிபாதாக எண்ணுகிறேன்' :) உண்மைதான்.. உடலை ஆராதிக்கும் மரபுதான் நம்முடையது.. இருப்பின், 'நான் எனக்குப் பிடித்த பெண்ணுடன் நான் விரும்பும் வரை வாழ்கிறேன், என்னை விட்டு விடுங்கள்' என்ற பரந்த மனப்பான்மை இருபாலர்களிடமும் இருந்தால் நன்று.. இங்கு நாம் யோசிக்கவேண்டியது, 'சுயத்தின்' அளவுகோலை.. எல்லைக்கோடுகளை.. சில நேரங்களில் எவ்வளவு விரிவடைகிறது, சில நேரங்களில் எவ்வளவு சுருங்குகிறது என்று.. உதா. பொருள் ஈட்டும்போதும் மணமுடிக்கும்போதும் எடுத்துக்கொள்வோம்.. இந்த அளவுகோல்கள் விரிவடையச் செய்யவே சுயதேடல்கள் வழிவகுக்கின்றன.. ஆனால், நுகர்வாளனைக் குறிவைக்கும் எந்த 'சிஸ்டம்'உம், சுயஇன்பத்தைத் தேடும் மனநிலையும் சுயத்தைக் குறுக்குவதற்கே எண்ணுகின்றன.. இந்நிலையில், இந்தச் 'சமூகம்' சில எதிர்ப்போக்குகளைக் கொண்டுதான் இவற்றை எதிர்கொள்ளநினைக்கும்.. அதில் ஒன்றுதான் இந்த மணம்.. சற்றே விரிவடையச் செய்ய ஒரு 'நப்பாசை' னு வச்சுக்கலாம்..
சமுகம் எண்ணங்களை வெளிபடுத்த தடை விதிப்பதில்லை தான், அது அவர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில்,கொஞ்சம் deviations allowed. அனால் நான் கூறுவதை சொன்னால் பயித்தியக்காரன் என்று கூறி புறக்கணித்து விடுவார்கள்.
இது இயற்கை உண்டாக்கிய உலகம் என்று நான் கூறுவது உலகம் உருவான முதல் நாளையே. எனக்கு இந்த உடை அணிந்த உலகமும், பணம் சம்பாரிக்க வேண்டும் என்று சொல்லும் உலகமும், என் சக மனிதனை பார்க்க நான் visa,passport வாங்க வேண்டும் என்று எல்லைகள் வகுத்த உலகத்தையும் அல்ல.
நம் உலகத்தில் இயற்கையை மட்டும் தெய்வமாக கொண்டு வாழ்ந்தவர்கள் எப்போதும், எல்லா கால கட்டங்களிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், அனால் அந்த அளவு காலம் நகுற நகுற சுருங்கி கொண்டே வருகிறது. பட்டங்களை முதலில் உருவாக்கியதே யாரோ ஒரு முதாதையர் தானே, அதற்கே அந்த வரி. கொஞ்சமாக இருந்த அது போன்ற மூதாதையர் இப்போது எங்கும் எதிலும்முடிவ் எடுக்கும் அதிகாரத்தில் உள்ளார்கள்.அதே நான் குறிப்பது.
கண்டிப்பா. இது அனைத்தும் நப்பாசைகள் தான். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நலமாய் வாழ ஆசை.
ரொம்பவே நகர்ந்து வந்துவிட்டோமென்று நினைக்கிறேன்..
'கண்டிப்பா. இது அனைத்தும் நப்பாசைகள் தான். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நலமாய் வாழ ஆசை.'
நான் கூறியது 'சமூகத்தின்' நப்பாசை.. தனி மனிதனுடையதல்ல.. இருக்கும் சூழலில் இருந்து அடி எடுத்துதான் வைக்க முடியும்.. அந்த அடியைத் தேர்ந்தெடுக்கப் பல தேர்வுகளைச் சமூகமே தருகிறது.. a quote from a film fits here 'its only about choices and we're given only choices'.. இன்று இருக்கும் சூழலில், தனிமனித அடையாலங்களுக்குத் தேடி அலையவைக்கும் உணர்வை வைத்து மட்டுமே 'தீர்ப்பெழுதும்'/முன்முடிவுகளுக்கு வரும் 'system'இல், அதை எதிர்கொள்ள நமக்கிருக்கும் ஒரு தேர்வு/ஒரே தேர்வு மணமென்று வைத்துக்கொள்ளுவோம்..
yes. we have got away... interlinks cannot be stopped...this medium is not just right enough to share our thoughts, might be if v both or online at the sametime, we can have a chat to discuss on it....
until that lets make our choices as heart says.... ;-)
Post a Comment